Popular Posts

Thursday, July 14, 2011

NEWS

ரூ.4,000 கோடியில் கார் தொழிற்சாலை : பிரான்ஸ் நாட்டின் பியூஜியாட் சிட்ரியான் நிறுவனம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ பியூஜியாட் சிட்ரியான் நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, 5,000 பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், பியூஜியாட் சிட்ரியான் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் பிரெடிரிக் பேப்ரி, தலைமையிலான குழு, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

--தமிழகம் ஒளிர்கிறது!!

No comments:

Post a Comment