பன்றிக்காய்ச்சல்: தமிழகத்தில் 20 பேர் பாதிப்பு!
தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 20 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காங்கேயத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமி உயிரிழந்ததை அடுத்த மற்ற 19 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் கொற்கை பாண்டியன், இதன் முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும், பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப போடப்படும் என்றும் கூறியுளார்.
மேலும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை 25 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment