Popular Posts

Thursday, April 5, 2012

ALERT !!!


பன்றிக்காய்ச்சல்: தமிழகத்தில் 20 பேர் பாதிப்பு!
 
தமிழகத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 20 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள்  தயார் நிலையில் உள்ளதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர்  தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 20 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காங்கேயத்‌தை சேர்ந்த விவசாயி கந்தசாமி  உயிரிழந்ததை அடுத்த மற்ற 19 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பொது சுகாதாரத்துறை  இயக்குனர் கொற்கை பாண்டியன், இதன் முதல்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாகவும்,  பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப போடப்படும் என்றும் கூறியுளார்.

மேலும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை 25 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

Tuesday, April 3, 2012

மின்கட்டண குறைப்பு : முதல்வர் அறிவிப்பு

ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மின்கட்டணத்தில், குறைப்பு செய்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர் மின்வெட்டு, பால் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்டவைகளால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மின்கட்டண உயர்வு இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது. இதனால்,மக்கள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

குறைப்பு விபரம் : இந்நிலையில், வீட்டு உபயோகத்திற்கான மின்கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் அறிவித்தார். அதன்படி,

1 முதல் 100 யூனிட்களுக்கு - ரூ. 1.10 லிருந்து ரூ. 1

101 முதல் 200 யூனிட்களுக்கு - ரூ. 1.80 லிருந்து ரூ. 1.50

2 மாதங்களில் 500 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு

1 முதல் 200 யூனிட் வரை - ரூ. 3லிருந்து ரூ. 2

201 முதல் 500 யூனிட்களுக்கு - ரூ. 3.50 லிருந்து ரூ. 3 ஆக குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

ரூ. 740 கோடி நஷ்டம் : மின் கட்டணம் குறைப்பால் , சுமார் ஒன்றரை கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும், இதனால், மின்வாரியத்திற்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 740 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை மானியமாக அரசு மின்வாரியத்திற்கு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

கட்சிகள் வெளிநடப்பு : முதல்வரின் அறிவிப்புக்கு முன்னதாக, மாநில அரசு உயர்த்தியுள்ள மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இன்று சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தன. இவ்விவகாரம் தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர இக்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து கட்சிகள் வெளிநடப்பு செய்தன.