Popular Posts

Wednesday, August 10, 2011

Joke of the week..

அரவக்குறிச்சி : 2016ம் ஆண்டு ம.தி.மு.க. ஆண்டு என்றும், அப்போது, வைகோ முதல்வராக இருப்பார் என்று கட்சி கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். கரூர் மற்றும் அரவக்குறிச்சி ம.தி.மு.க.கட்சி சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய நாஞ்சில் சம்பத் கூறியதாவது, தமிழக அரசியலில், மாற்று சக்தி ஒன்று உள்ளதென்றால் அது ம.தி.மு.க., மட்டுமே என்றும், வரும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி திருநெல்வேலியில் ம.தி.மு.க. சார்பில் மாநாடு நடைபெற உள்ளது. கட்சி பொதுச் செயலாளர் வைகோ, உண்மையான தமிழினப் போராளி என்றும், 2016ம் ஆண்டில், ம.தி.மு.க ஆட்சி அமைத்து, முதல்வர் நாற்காலியில் வைகோ இருப்பார் என்றும் கூறினார். தமிழக அரசியலின் இன்றைய சூழ்நிலையில், ஒரு கட்சி பழிவாங்க துடிக்கிறது. மற்றொரு கட்சியோ, தங்களை பாதுகாத்துக்கொள்ள துடிக்கிறது. ஆக மொத்தத்தில், எந்த கட்சியுமே மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment