சிந்துசமவெளி
நாகரிகம் சென்ற வாரத் தொடர்ச்சி:
- ராஜாவிற்கு நிர்வாகத்தில் உதவி செய்தவர்கள் - புரோகிதர், சேனானி (படைத்தலைவர்)
- ராஜாவிற்கு உதவி செய்த அமைப்புகள் - சபா, சமிதி
- சபா - முதியோர் அவை
- சமிதி - ஊர்மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவை
- ரிக் வேத கால மக்கள் தெரிந்து வைத்திருந்த தொழில்- கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை, தச்சு வேலை, நூல் நூற்றல், பருத்தி, கம்பளி ஆடைகள் உற்பத்தி.
- வணிகத்தில் நிஷ்கா என்ற தங்க அலகுகள் பயன்படுத்தப்பட்டன.
பிற்பட்ட
வேதகாலம்
- பிற்பட்ட வேதகாலம் (கி.மு. 1000 - கி.மு.600) - ரிக் வேத காலத்திற்குப் பின்னர், சாம, யஜுர், அதர்வண வேதங்களின் காலமே பிற்பட்ட வேதகாலம்
- முற்பட்ட மற்றும் வேதகால மக்கள் காபூலிலிருந்து மேல் கங்கைவரை பரவி இருந்தனர்.
- பிற்பட்ட வேதகாலத்தில்தான், கங்கைச் சமவெளியில் கோசலம், விதேகம், குரு, மகதம், காசி, அவந்தி, பாஞ்சாலம் போன்ற அரசுகள் தோன்றின.
- அரசப் பதவி பரம்பரைப் பதவியானது.
- வேள்விகள் இந்தக் காலத்தில்தான் அதிகரித்தது.
- ராஜசூயம், அஸ்வமேதம் போன்ற யாகங்கள் மன்னரின் பேராதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டன.
- ஒருவரிடம் இருந்த கால்நடைகளின் எண்ணிக்கையைப் பொருத்து, அவரது செல்வ நிலை மதிப்பிடப்பட்டது.
- நிஷ்கா, சுவர்ணா, சதமானா போன்ற தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.
- சாதி அமைப்புமுறை தோன்றி வலுப்பட்டது.
- கார்கி, மைத்ரேயி போன்ற பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினர்.
திராவிடர்கள்:
- இருண்ட நிறமும், நடுத்தரமான உயரமும் கருமையான தலைமுடியும் உடையவர்கள்.
- முதன்மைத் தொழில்; பயிர்த்தொழில், வணிகம்
- பருத்தி ஆடை உடுத்தினர்.
- முக்கிய விலங்கு எருது
- சுட்ட செங்கற்களால் வீடுகளைக் கட்டினர்.
- வழிபாடு: கோயில் வழிபாடு, சிலை, லிங்கம், சூலம், சக்தி, நாகம்
- செம்பு உலோகத்தை பயன்படுத்தினர். இரும்பை அறிந்திருக்கவில்லை.
- புலியை அறிந்திருந்தனர்; ஆனால், குதிரை பற்றி தெரியாது.
ஆரியர்கள்:
- வெள்ளை நிறமும், உயரமான உருவமும், செம்பட்டையுமான முடியும் உடையவர்கள்.
- முதன்மைத் தொழில் ; கால்நடை வளர்ப்பும், போர் புரிதலும்
- கம்பளி, பருத்தி மற்றும் விலங்குகளின் தோலை உடுத்தினர்.
- முக்கிய விலங்கு பசு.
- களிமண் மற்றும், மூங்கில்கள் கொண்ட வீடுகளை அமைத்தனர்.
- வழிபாடு; யாகம் செய்தல், சிலைகளும், கோயில்களும் இல்லை; இந்திரன் அக்னி, வருணன்.
- இரும்பை அறிந்திருந்தனர்.
- புலி அறியார்; குதிரைகளைப் பயன்படுத்தினர்.
சமணமும், பௌத்தமும்:
- கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் பௌத்தமும், சமணமும் தோன்றின.
- சமண மதத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.
- பௌத்த மத கருத்துக்களை வழங்கியவர் கௌதமபுத்தர்.
- சமண மதத்தினரால் 24 தீர்த்தங்கரர்கள் வழிபடப் படுகின்றனர்.
- முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிஷபதேவர் ஆவார்.
- 24வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர்
வர்த்தமான
மகாவீரர்:
- இவரின் காலம் கி.மு. 534 - கி.மு. 462
- இன்றைய பீகார் மாநிலத்தில் வைசாலி நகருக்கு அருகிலுள்ள குந்தக்கிராமம் என்னும் ஊரில் பிறந்தார்.
- இவரது தந்தையார் பெயர் சித்தார்த்தர்; தாயின் பெயர் திரிசலை.
- மனைவி பெயர் யசோதா; அனோஜா பிரியதர்சனா என்ற மகளும் இருந்தனர்.
- இல்வாழ்க்கையை துறந்தது 30ஆம் வயதில்.
- தியானத்தில் ஆழ்ந்த வருடங்கள் மொத்தம் 12.
- வெற்றியாளர் என்பதைக் குறிக்கும் ஜீனர் என்ற சொல்லால் அழைக்கப்பட்டார்.
- மக்கள் அவரை ‘மகாவீரர்’ என்று அழைத்தனர்.
- வர்த்தமானர் போதித்த மும்மணிகள் ; நல்லறிவு, நன்னம்பிக்கை, நன்னடத்தை.
- சமண சமயத்தைப் பின்பற்றி அரசர்கள்; சந்திரகுப்த மௌரியர், கலிங்கத்துக் காரவேலன், கூன் பாண்டியன், முதலாம் மகேந்திரவர்ம பல்லவர்.
- சமணர்களின் தமிழ் இலக்கிய, இலக்கணப் படைப்புகள் ; சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, சூளாமணி முதலிய காப்பியங்கள் மற்றும் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலவிருத்தி, நேமிநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், இலக்கண விளக்கம் போன்ற இலக்கண நூல்களையும், நிகண்டுகளையும், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலை நூற்றைம்பது முதலிய அற நூல்களையும் இயற்றியவர்கள் சமணர்கள்.
- சமணக் கட்டடக் கலை: ராஜஸ்தான் -மவுண்ட் அபு, தில்வாரா கோயில். கஜுராஹோ, சித்தூர், ரனக்பூர் - சமணர் கோயில்.
- சமணர்களின் புனித நூல்கள் - அங்கங்கள், பூர்வங்கள்.
பௌத்த மதம்:
- தோற்றுவித்தவர் - சித்தார்த்தர் எனும் கௌதமபுத்தர்.
- வாழ்ந்த காலம் - கி.மு.563 - கி.மு.483.
- நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்து எனும் ஊரில் பிறந்தார்.
- இவரது தந்தை சாக்கியக் குலம். தந்தை சுத்தோதனர், தாய் மாயாதேவி.
- யசோதரையை மணந்தபோது சித்தார்த்தருக்கு வயது 16.
- மகன் பெயர் ராகுலன்.
- புத்தர் என்ற சொல்லின் பொருள் நல்லது எது,கெட்டது எது என்பதை அறிந்து கொண்டவர் என்பது ஆகும்.
- புத்தர் தனது முதல் போதனையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியின் அருகே சாரநாத்தில் உள்ள மான் பூங்காவில் தொடங்கினார்.
- புத்த மதம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- ஹீனயானம் - புத்தரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்யாதவர்கள்.
- மஹாயானம் - புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டவர்கள். உருவ வழிபாடு செய்பவர்கள்.
- பௌத்த மதத்தைப் பின்பற்றிய அரசர்களில் முக்கியமானவர் - அசோகர், கனிஸ்கர், ஹர்ஷர்.
- பௌத்த சமயக் கொள்கைகளைக் கூறும் மறைநூலுக்குத் திரிபிடகம் என்று பெயர். இது வினயபிடகம், சுத்த பிடகம், அபிதம்மபிடகம் என்ற மூன்று உட் பிரிவுகளைக் கொண்டது.
- மணிமேகலையும், குண்டலகேசியும் பௌத்த நூல்கள்.
- பௌத்த சமய வரலாற்றை பெரிதும் விளக்கும் நூல் - ஜாதகக் கதைகள்.
- காந்தாரக் கலை சிற்பங்களும் புத்த சமயத்தைச் சார்ந்தவையே.
- பௌத்த சமயத் துறவிகளின் பிரார்த்தனைக் கூடங்கள் சைத்தியங்கள் என்றும், மடாலயங்கள் விகாரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
- திரிபிடகம் முதன்முதலில் நூல் வடிவில் எழுதப்பட்டது வட்டக் காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில்.
- திரிபிடகம் என்பதற்கு மூன்று கூடை என்பது பொருள்.
மகாஜனபதங்கள்:
- புத்தர் காலத்தில் வட இந்தியாவில் பதினாறு மகாஜனபதங்கள் மேலோங்கி இருந்தன.
- 16 மகாஜனபதங்கள்: 1. அங்கம் 2. மகதம் 3. கோசலம் 4. காசி 5. வஜ்ஜி 6. மல்லம் 7. கேதி 8. வத்சம் 9. குரு 10. பாஞ்சாலம் 11. மத்ஸ்யம் 12. சூரசேனம் 13.அஸ்மகம் 14. அவந்தி 15. காந்தாரம் 16. காம்போஜம்.
பிம்பிசாரர்:
- அரியங்க வம்சத்தைச் சேர்ந்தவர்.
- பிம்பிசாரரின் மகன்தான் அஜாதசத்ரு. தந்தையையே சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். பாடலிபுத்திரத்தில் பெரிய கோட்டையை அமைத்தவரும் இவரே.
- அரியங்க வம்சத்தை வீழ்த்தியவர் - சிசுநாகர்.
- சிசுநாகர் - நந்தவம்சத்தைச் சேர்ந்தவர்.
- மகதத்தின் ஆட்சியை வட இந்தியா வரை பரப்பியவர் சிசுநாகர்தான்.
- முதல் நந்தமன்னர் மகாபத்மநந்தன் விந்திய மலைகளைக் கடந்து தக்காணப் பகுதிகளைக் கைப்பற்றினார்.
- சிந்து நதி முதல் தக்காணம் வரை பரந்துவிரிந்த முதல் இந்தியப் பேரரசை உருவாக்கியவர் மகாபத்மநந்தன்.
- நந்தவம்சத்துப் பேரரசர்கள் சமண சமயத்தைப் போற்றினார்கள்.
மௌரியப் பேரரசு:
- நந்தமன்னரான தனநந்தனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, போரில் வென்று மகதப் பேரரசை மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தர் கைப்பற்றி ஆண்டார்.
- கிரேக்க மன்னர் செலூகஸ் நிகேடார் என்ற கிரேக்க மன்னரைத் தோற்கடித்து, ஆப்கானிஸ்தானம், காந்தாரம் போன்ற பகுதிகளை சேர்த்த பெருமையும் சந்திரகுப்தரையே சாரும்.
- சந்திரகுப்தரது காலத்தில்தான் செலூகஸின் தூதுவரான மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர் பாடலிபுத்திரத்தில் பல ஆண்டுகள் தங்கி இந்தியாவைப்பற்றி இண்டிகா எனும் நூலை எழுதினார்.
- சந்திரகுப்த மௌரியருக்குப்பின் அவரது அரியணையில் இருந்து ஆட்சியை 25 ஆண்டுகள் மேற்கொண்டது அவரது மகன் பிம்பிசாரர்.
- பிம்பிசாரரின் மகன்களில் ஒருவர்தான் அசோகர்.
- பிம்பிசாரருக்குப் பிறகு மௌரியப் பேரரசை ஆண்டவர் அசோகர்.
- மௌரியப் பேரரசில் இருந்து பிரிந்துசென்ற கலிங்கத்தை மீண்டும் சேர்க்க கடுமையான போரை மேற்கொண்டார். அந்தப் போரில் வெற்றிபெற்று கலிங்கத்தை மௌரியப் பேரரசுடன் இணைத்தார். ஆனால், அந்தப்போரில் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தைப் பார்த்துவிட்டு, இனி போரிடுவதில்லை என்னும் உறுதி எடுத்தார்.
- படையெடுத்துப் போர் செய்து வெற்றி பெறுவது திக் விஜயம் என்று அழைக்கப்பட்டது.
- மக்களிடம் தர்மத்தை வளர்க்க மேற்கொண்ட பயணம் தர்ம விஜயம் என்றும் அழைக்கப்பட்டது.
- மக்களுக்கு உதவுவதற்காக அசோகர் நியமித்த பணியாளர்கள் தர்மமகாமாத்திரர்கள் என அழைக்கப்பட்டனர்.
- இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பு அசோகரையே சாரும்.
- பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
- கபிலவஸ்து, சாரநாத், புத்தகயா போன்ற இடங்களில் பௌத்த நினைவிடங்களை விரிவுபடுத்தினார்.
- அசோகர் காலத்து கல்வெட்டுகள் பெரும்பாலும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை.
- அசோகர் ஆட்சியில் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேற்கொண்டவர்கள் ‘அந்தமகாமாத்திரர்’ என்று அழைக்கப்பட்டனர்.
தமிழகம்:
குரூப் 4 தேர்வு மட்டுமல்லாது, டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வுகள் அனைத்திலும் தமிழகம் சார்ந்த
கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழகம் பற்றிய முக்கியத் தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம்.
தமிழ்நாட்டின் எல்லைகள்
திசை எல்லை
வடக்கு ஆந்திரப்பிரதேசம்
மற்றும் கர்நாடகம்
தெற்கு இந்தியப்
பெருங்கடல்
கிழக்கு வங்காளவிரிகுடா
மேற்கு கேரளா
தமிழ்நாட்டின் காலநிலை
- தென்மேற்குப் பருவக்காற்றின் மூலம் ஜூன் முதல் செப்டம்பர் வரை மழை பெறும். இதன் மூலம் தெற்கு தமிழகம் பயன் பெறும்.
- வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை பெறும். இதன் மூலம் பரவலாக தமிழகம் முழுவதும் பயன் பெறும்.
மேற்குத்
தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளமலைகள்:
1.
நீலகிரி மலை 2. பழனி மலை 3. குற்றால மலை 4. அகஸ்தியர் மலை 5. மகேந்திரகிரி மலை 6. ஏலக்காய் மலை 7. வருஷநாடு மலை 8. சிவகிரி மலை
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளமலைகள்:
1. ஜவ்வாது மலை 2. ஏலகிரி மலை 3. செஞ்சி மலை 4. கல்வராயன் மலை 5. பச்சை மலை 6. கொல்லி மலை 7. சேர்வராயன் மலை 8. செயின்ட் தாமஸ் குன்றுகள்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சிகரங்கள்:
1.
ஆனை முடி - 2695 மீ 2. தொட்டபெட்டா - 2637 மீ
கிழக்குத்
தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சிகரங்கள்: மகேந்திரகிரி - 1501 மீ
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள கணவாய்கள்:
1.
பாலக்காட்டுக் கணவாய் 2. தால்காட்
கணவாய் 3. போர்காட் கணவாய்
4. செங்கோட்டைக் கணவாய் 5. ஆரல்வாய் கணவாய்
தமிழ்நாட்டில் உள்ள மலைகள்:
சேர்வராயன் மலை, கொல்லி மலை, தீர்த்த மலை, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை, பச்சை மலை, பழனி மலை, நீலகிரி
மலை.
கொங்கு மண்டலம்:
காவிரிக்கும், பாலக்காட்டுக்கும் இடையில் உள்ளது
(ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நீலகிரி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி)
தாமிரம்
•
மனித இனத்தால் முதன்முதலில் கண்டறியப்பட்ட உலோகம்.
•
இதன் மற்றொரு பெயர் செம்பு.
•
மின்சாதனங்கள், கொள்கலன்கள்
தயாரிக்கப் பயன்படுகிறது.
•
வெப்பத்தையும், மின்சாரத்தையும்
கடத்தும் உலோகம்.
•
ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தாமிரம்
கிடைக்கிறது.
நிலக்கரி
•
உலகின் நிலக்கரி வளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசியக் கண்டத்தில் உள்ளது.
•
அனல் மின்சக்திக்கான மூலப் பொருள்.
•
மத்தியப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு, ஆந்திர
மாநிலங்களில் கிடைக்கிறது.
•
தமிழ்நாட்டில் நெய்வேலியில் கிடைக்கிறது.
பெட்ரோலியம்
•
மும்பை, அசாம் திக்பாய், குஜராத் அங்க்லேஷ்வர் இடங்களில்
கிடைக்கின்றன.
•
மும்பை, சென்னை, கொச்சி இடங்களில் கச்சா எண்ணெய்
சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்துள்ளன.
•
இந்தியாவில் பாதரசம் கிடைக்கும் ஒரே மாநிலம் - கர்நாடகம்
•
கனிமச்சுரங்கங்கள், பெட்ரோலிய
வயல்கள் அதிகம் உள்ள இடம் - பசுபிக் பெருங்கடல்.
•
உலகில் மைக்கா உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் - பீகார்.
•
இந்தியாவில் ஜிப்ஸம் கிடைக்கும் இடம் - ஹிமாச்சலப் பிரதேசம்.
•
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வயல் - சவுதி அரேபியா.
•
உலகின் தங்க மாநிலம் என்பது - அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா.
•
உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் - தென் ஆப்பிரிக்காவில் உள்ள கிம்பர்லி.
•
இந்தியாவின் மிகப்பெரிய சுண்ணாம்புக் கல் குகை - மேகாலயா மாநிலத்தில் உள்ள சிஜி.
•
APPLE – Ariane Passenger Payload Experiment Research
•
INSAT – Indian National Satellite System
•
EDUSAT – Educational Satellite
•
PSLV – Polar Satellite Launch Vehicle
•
GSLV – Geo – Synchronous Satellite Launch Vehicle
•
ISRO – Indian Space Research Organization
•
NASA – National Aeronautics and Space Administration
நமது அரசாங்கம்
•
மத்திய ஆட்சிக்கு உட்பட்ட பகுதி - யூனியன் பிரதேசம்
•
உலகிலேயே மிகவும் நீளமாக எழுதப்பட்ட ஆவணம் - இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
•
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு 1950 ஜனவரி 26.
•
இந்தியாவில் வாக்களிக்க ஏற்ற வயது - 18
மக்களவை
•
மக்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 545 (இதில் 543 மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்; இரண்டு உறுப்பினர்களை குடியரசு தலைவர் தேர்ந்தெடுப்பார்)
•
மக்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அடிப்படை வயது வரம்பு - 25
•
மக்களவை உறுப்பினரின் பதவிக்காலம் - ஐந்தாண்டுகள்.
•
மக்களவைத் தலைவரையும், மக்களவைத்
துணைத் தலைவரையும் யார் தேர்ந்தெடுப்பார்கள் - மக்களவை உறுப்பினர்கள்.
•
இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு கி.பி.1952.
•
இந்தியாவின் முதல் பிரதமர் - நேரு
•
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திராகாந்தி
•
இந்தியாவின் முதல் சபாநாயகர் - ஜி.வி. மௌலாங்கர்.
•
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதிபா பாட்டீல்
•
இந்தியாவின் முதல் பெண் மக்களவைத் தலைவர் - மீரா குமார்.
மாநிலங்களவை
• மொத்த
உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250 பேர்
(இதில் 238 பேர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றர். மீதியுள்ள 12 பேர் இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவையில் சிறப்பிடம் பெற்றவர்களை குடியரசுத் தலைவர் தேர்வு செய்கிறார்)
•
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்
• எத்தனை
ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களவையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஓய்வு பெறுவர் - இரண்டு
ஆண்டுகளுக்கு ஒரு முறை.
•
மாநிலங்களவையின் தலைவர் - துணைக் குடியரசுத் தலைவர்.
•
மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு அடிப்படை வயது வரம்பு - 30.
•
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் - ஐந்து ஆண்டுகள்
•
இந்திய நாட்டின் அரசியலமைப்பின் சிறப்பம்சம் - பல கட்சி ஆட்சி முறை.
•
இந்திய அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த தலைவர் - பிரதமர்.
•
ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளுநர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் - குடியரசுத்
தலைவரால்.
•
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - 234
• இந்தியாவில்
சட்ட மேலவை உள்ள மாநிலங்கள் - மகாராஷ்டிரம்,
உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், ஆந்திரம் (தற்போது தமிழகத்தில் மேலவை அமைக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்
அளித்துள்ளார்).
•
டில்லி தேசிய தலைநகர் பகுதியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1991.
•
சார்க் நாடுகளில் உள்ள உறுப்பினர்கள் - இந்தியா, பூட்டான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்.
•
இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கியவர் - நேரு.
•
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - ராஜேந்திரபிரசாத்
•
இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவர் - டாக்டர் ராதாகிருஷ்ணன்.
•
இந்தியத் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் - கமலா தேவி சட்டோபாத்தியா
•
தேர்தலில் முதன் முதலில் பெண்கள் வாக்களித்த ஆண்டு - 1950
•
பாராளுமன்றத்திற்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1952
•
இந்தியாவில் மொத்த சட்டசபைத் தொகுதிகளின் எண்ணிக்கை - 4,052
•
தனி அரசியல் சட்டம் கொண்ட இந்திய மாநிலம் - ஜம்மு காஷ்மீர்
•
நீதிமன்றங்கள் பாராளுமன்றத்தின் மூன்றாவது அவை எனக் கூறியவர் - மொரார்ஜி
தேசாய்.
•
2 மாவட்டங்கள் மட்டுமே கொண்ட யூனியன் பிரதேசம் - அந்தமான்
நிக்கோபார் தீவுகள்.
உள்ளாட்சி அமைப்புகள்
•
இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் - ரிப்பன் பிரபு
•
கிராமசபைக் கூட்டங்கள் யாருடைய ஆணையின் பெயரில் கூட்டப்படுகின்றன - மாவட்ட
ஆட்சித் தலைவர்.
•
குடவோலை முறையில் உள்ளாட்சி முறையை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது எந்த மன்னர்
காலத்தில் - சோழர் ஆட்சிக்காலத்தில்.
•
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான
இட ஒதுக்கீடு எப்படி - மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு
பங்கு.
• தமிழ்நாட்டில்
உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை - 10 (சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருச்சி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி).
•
கிராமப்புற உள்ளாட்சியில் எத்தனை அடுக்கு அமைப்புகள் உள்ளன - 3 (கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி)
•
ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் - மக்கள், தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர்.
•
வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் - 5
•
ஓர் ஊராட்சியில் அதிகபட்சம் எத்தனை வார்டு உறுப்பினர்கள் இருக்கலாம் - 6 முதல் 15.
•
நகரங்களில் உள்ளாட்சி அமைப்புகள் எத்தனை
வகைகளாக பிரிக்கப்படுகின்றன - மூன்று ( பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி)
•
எவ்வளவு மக்கள்தொகை இருந்தால், அதை
மாநகராட்சிப் பகுதியாக அறிவிக்கலாம் - பத்து லட்சம் அல்லது அதற்கு மேல்.
•
கிராமக் கல்விக் குழுவின் தலைவராக செயல்படுபவர் யார் - ஊராட்சி மன்றத் தலைவர்
அல்லது வார்டு உறுப்பினர்.
செஞ்சிக்கோட்டை
•
செஞ்சிக்கோட்டை - விழுப்புரம் மாவட்டம்.
•
செஞ்சிக்கோட்டையை ஆண்ட குறுநில மன்னர்கள் - ஆனந்தக்கோன், புலியக்கோன், ராஜாதேசிங்கு.
•
செஞ்சிக்கு இதரப் பெயர்கள் - பாதுஷா பாத்,
சிங்கபுர நாடு.
•
செஞ்சிக்கோட்டை எந்த கட்டடக்கலைக்கு நிகரானது - ஹம்பி.
வேலூர்க் கோட்டை
•
சின்ன பொம்ம நாயக்கனால் கட்டப்பட்டது.
•
எந்தப் பேரரசின் ஆட்சியில் இக்கோட்டை கட்டப்பட்டது - விஜயநகரப் பேரரசின்
ஆட்சியின்போது.
•
இக்கோட்டையில் உள்ள கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் - பத்ரிகாசி இமாம்.
•
இந்தக் கோட்டை எத்தனை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது - ஒன்பது ஆண்டுகள்
•
யார் பிடிகளில் எல்லாம் இந்தக் கோட்டை இருந்தது - நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான், மராட்டியர், ஆற்காடு நவாப்.
•
சிப்பாய்க்கழகம் ஏற்பட்ட ஆண்டு - 10 -07
- 1806.
•
வேலூர்க் கோட்டை எந்தக் கோட்டையின் மாதிரி - இத்தாலி ராணுவக் கோட்டை.
•
திப்புசுல்தான் அடைக்கப்பட்டிருந்த இடத்திற்கு என்ன பெயர் - திப்பு மகால்
•
வேலூர் புரட்சியின் 200வது
ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்ட ஆண்டு - 2006.
தரங்கம்பாடி கோட்டை
•
செங்கலால் கட்டப்பட்ட கோட்டை
•
வாணிப நோக்கத்திற்காக கட்டப்பட்ட கோட்டை.
•
கோட்டை அமைந்துள்ள மாவட்டம் - நாகப்பட்டினம்.
•
கட்டப்பட்ட ஆண்டு - கி.பி.1620.
சீகன்பால்க்
•
கி.பி.1706ஆம் ஆண்டு
இந்தியா வந்தார்.
•
கூட்டன்பர்க் கண்டறிந்த அச்சு இயந்திரத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர்
இவர்தான்.
•
தரங்கம்பாடியில் இருந்து வாணிபம் மேற்கொண்டவர்கள் - டேனியர்கள்
•
ஆங்கிலேயர்கள் வியாபாரம் செய்வதற்காக தமிழகத்தில் கட்டிய முதல் கோட்டை - புனித
ஜார்ஜ் கோட்டை.
•
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு - 1639
•
புனித ஜார்ஜ் கோட்டை கட்டும்போது தமிழகத்தில் இருந்த ஆங்கிலேய தளபதி - சர்
பிரான்சிஸ்டே.
• புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மாதா
தேவாலயத்தில் யாருடைய திருமணம் நடைபெற்றது
- ராபர்ட் கிளைவ்
மற்றும் ஆளுநர் எலிஹீஹேல் ஆகியோரின்
திருமணங்கள்.
•
யாருடைய படையெடுப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்தக் கோட்டை கட்டப்பட்டது
- ஔரங்கசீப்.
•
புனித ஜார்ஜ் கோட்டையை யார் வாழ்ந்த வீடாக சொல்வார்கள் - ராபர்ட் கிளைவ்
மற்றும் வெல்லெஸ்லி.
•
இந்தியாவின் மிக உயரமான கொடிக்கம்பம் உள்ள இடம் - புனித ஜார்ஜ் கோட்டை.
•
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான்
இந்தியாவின் முதல் நவீன நூலகம்.
•
இந்தியாவின் முதல் மருத்துவமனை எந்த ஆண்டு எங்கு தொடங்கப்பட்டது - 1664, புனித ஜார்ஜ் கோட்டையில்.
•
கோட்டைகள் அதிகமுள்ள நாடு - செக்கோஸ்லோவேகியா (2500க்கும் அதிகம்)
•
உலகின் மிகப் பழமையான புகழ்பெற்ற கோட்டை - ராட்லனி (செக்கோஸ்லோவேகியா)
•
உலகில் உள்ள மிகப் பெரிய கோட்டை அரண்மனை - இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர்
அரண்மனை.
அறிவியல்
அறிவியல்
•
உயிரற்ற காரணிகள் - நிலம், நீர், சூரியன், காற்று
•
உயிருள்ள காரணிகள் - தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள்
•
மகரந்தச் சேர்க்கை - ஒரு பூவின் மகரந்தத் துகள்கள், அதே இனத்தைச் சேர்ந்த மற்றொரு தாவரத்தின்
சூல்முடியைச் சென்றடைவது.
•
அயல் மகரந்தச் சேர்க்கை - காற்றின் மூலம் நடைபெறும்
• விதை பரவுதல் என்பது - விதைகள் ஓரிடத்தில்
இருந்து மற்றோர் இடத்திற்கு காற்று, நீர்,
மனிதர்கள், விலங்குகள்
மற்றும் பறவைகள் ஆகியவற்றால் எடுத்துச் செல்லப்படுதல்.
•
அவரைக்காய், வெங்காயம்
தோன்றிய நாடு - ஆசியா
•
காப்பி, வெண்டைக்காய், தர்பூசணி தோன்றிய நாடு - ஆப்பிரிக்கா
•
பட்டாணி, முட்டைகோஸ், நெல்லிக்காய் தோன்றிய நாடு - ஐரோப்பா
•
உருளைக்கிழங்கு, மக்காச்சோளம், கொய்யா தோன்றிய நாடு - தென் அமெரிக்கா.
•
ஆலமரம், புளியமரம், வேப்பமரம், மாமரம் தோன்றிய இடம் - இந்தியா.
•
இலவம் பஞ்சு, முருங்கை, எருக்கு முதலிய தாவரங்களின் விதைகள் -
காற்றின் வாயிலாகப் பரவுகின்றன.
•
தென்னை, ஆகாயத்தாமரை, அல்லி, தாமரை ஆகியவற்றின் விதைகள் எப்படிப் பரவுகின்றன - நீரின்
வாயிலாக.
•
வெண்டை, உளுந்து, காராமணி, பால்சம், பயறு
வகைகளின் விதைகள் எப்படி பரவுகின்றன - வெடித்துப் பரவுகின்றன.
•
நாயுருவி, புல், நெருஞ்சி முதலியவற்றின் விதைகள் எப்படிப்
பரவுகின்றன - விலங்குகள் மூலம்
•
வாழிடம் என்பது - இயற்கையான சூழலில் உயிரினங்கள் வாழும் இடம்.
•
இந்தியாவின் தேசிய விலங்கு - புலி
•
மான்களுக்கான சரணாலயம் - கிண்டி தேசியப்பூங்கா, சென்னை மாவட்டம்.
•
பறவைகளுக்கான சரணாலயம் - வேடந்தாங்கல், காஞ்சிபுரம்
மாவட்டம்.
•
யானை, காட்டெருமை
சரணாலயம் - முதுமலை, நீலகிரி
மாவட்டம்.
•
புலி, சிறுத்தை
சரணாலயம் - ஆனைமலை, கோவை மாவட்டம்.
•
வெள்ளைப்புலி, நரி, குரங்கு சரணாலயம் - அறிஞர் அண்ணா
உயிரியல் பூங்கா, காஞ்சிபுரம்
மாவட்டம்.
•
இந்தியாவில் இருக்கும் மொத்த வனவிலங்குப் பாதுகாப்பகங்கள் - 17.
•
இந்தியாவில் உள்ள மொத்த தேசியப் பூங்காக்கள் - 66.
•
இந்தியாவில் முதன் முதலில் வனவிலங்கு பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பூங்கா - உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள
கார்பெட் தேசியப் பூங்கா.
•
SPCA (Society for the prevention of cruelty to animals) என்பது -
விலங்கு வதைத் தடைச் சட்டம்.
•
இந்தியக் காட்டு வாழ் உயிரிகள் வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1952
•
வனவிலங்கு வாரவிழா இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1955
•
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1972
•
தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1983
•
தேசியப் பூங்கா மற்றும் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளங்கள் அமைத்தல் எந்த ஆண்டு
உருவாக்கப்பட்டது - 1986
•
வண்ணத்துப்பூச்சி முழு வளர்ச்சி அடைய எத்தனை பருவங்களை கடக்கவேண்டியுள்ளது - 4 (முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி)
•
வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் என்று இந்தியாவில் அழைக்கப்படும் மாநிலங்கள்
- அஸ்ஸாம், சிக்கிம்.
•
உலகிலேயே மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி - நியூகினி நாட்டில் காணப்படும் அலெக்ஸாண்டிரா குயின்
வண்ணத்துப்பூச்சிதான் உலகிலேயே பெரியது (25 செ.மீ. நீளம்)
•
வண்ணத்துப்பூச்சிகளுக்கு மொத்தம் எத்தனை கால்கள் - 6
•
வண்ணத்துப்பூச்சியில் சுவையை அறியும் உறுப்பு எங்கு உள்ளது - கால்களில்
•
வண்ணத்துப்பூச்சி இரவில் தூங்குமா? - தூங்கும்.
ஆனால், கண்கள் மூடாது.
ஏனெனில் அதற்கு இமைகள் கிடையாது.
•
வண்ணத்துப்பூச்சிகள் எப்படி தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன - உடல்
அசைவு, நிறம், சத்தம் வாயிலாக.
•
சமுதாயப் பூச்சிகள் என்று அழைக்கப்படும் பூச்சி எது - தேனீ
•
தேன் கூட்டில் காணப்படும் மூன்று வகையான தேனீக்கள் - ராணித்தேனீ, ஆண் தேனீ, வேலைக்கார தேனீ
•
தேனீக்கள் நொடிக்கு எத்தனை தடவை இறக்கைகளை அசைக்கின்றன - 18,000 தடவை
•
ராணித் தேனீ - உருவத்தில் பெரியது; ஆயுட்காலம்
அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்.
• ஆண் தேனீக்கள் - இனப்பெருக்கத்திற்கு மட்டுமே பயன்படுகின்றன. இதில் வேலைக்காரத் தேனீக்களை விட ஆண் தேனீக்கள்
உருவத்தில் பெரிதாக இருக்கும்.
•
வேலைக்காரத் தேனீக்கள் - இனப்பெருக்கம் செய்யும் திறனற்ற பெண் தேனீக்கள் ஆகும். சுறுசுறுப்பானவை. ஆயுட்காலம் 28 நாள் முதல் 38 நாட்கள் வரை.
•
தேனீக்களின் இனங்கள் - மலைத் தேனீ, சிறுதேனீ, இந்தியத் தேனீ
•
சுமார் 425 கிராம் தேனைச்
சேகரிக்க எத்தனை பூக்களை தேனீ நாடுகிறது - சுமார் 20 லட்சம் பூக்கள்.
•
ஒரு கிலோ தேனில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறது - 3,200 கலோரி ஆற்றல்
•
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில்
மட்டும் உற்பத்தி செய்யப்படும் தேனின் அளவு - 25
மில்லியன் கிலோ.
• தேனில்
உள்ள சத்துக்கள் விவரங்கள் - நீர் 17
%; குளுக்கோஸ் - 31%, ப்ரக்டோஸ்
- 38%, மால்டோஸ் - 10%, ஆல்புமின் - 2%, கனிம உப்புகள் - 1%, வைட்டமின்கள் சாம்பல் சத்து - 1%
•
உப்பு எதன் பயனாகக் கிடைக்கிறது - உப்பு நீர் ஆவியாதல் நிகழ்ச்சியின் மூலம்.
• நீர் சுழற்சி என்பது - பூமியின் மீதுள்ள நீர்
ஆவியாக மாறி மேகங்களை உண்டாக்குகின்றன.
மேகங்கள் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது. இதுவே நீர் சுழற்சி.
•
இயற்கையில் மூன்று நிலைகளில் கிடைக்கும் ஒரே பொருள் - நீர் (திடநிலை -
பனிக்கட்டி; திரவநிலை - நீர்; வாயுநிலை - நீராவி.
•
தூய்மையான நீரின் குணங்கள் - நிறமற்றது;
மணமற்றது; சுவையற்றது.
•
ஆலங்கட்டி மழை என்பது - மேகங்களில் ஏற்படும் மிகுந்த குளிர்ச்சியின் காரணமாக
மழைநீர் பனிக்கட்டியாக மாறுகின்றது.
•
சர்வ கரைப்பானுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - நீர்
•
ஆழம் அதிகரிக்கும்போது நீரின் அழுத்தம் எப்படி இருக்கும் - அதிகமாக
•
பூமியில் உள்ள மொத்த நீரில் கடல் நீரின் அளவு - 97.3 சதவீதம்.
•
பூமியில் குடிக்கும் தன்மையில் உள்ள நீரின் அளவு - 1 சதவீதம்
•
உலக நீர் நாள் - மார்ச் 22
•
காற்றின் பண்புகள் - எல்லா திசைகளிலும் பரவும்; இடத்தை அடைத்துக்கொள்ளும்.
•
மனிதன் சுவாசித்தலின்போது என்ன நடக்கிறது - ஆக்சிஜன் உள்இழுக்கப்பட்டு, கார்பன் -டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது.
•
ஆழ்கடலில் மூழ்குபவர்கள், விண்வெளி
ஆய்வாளர்கள் தங்களுடன் வைத்துக்கொள்ளும்
சிலிண்டரில் அடைக்கப்பட்டிருக்கும் வாயு என்ன - ஆக்ஸிஜன்.
•
கார்பன் - டை ஆக்சைடு - தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகிறது.
•
நைட்ரஜன் - இயற்கை உரமாகப் பயன்படுகிறது.
•
மந்த வாயுக்கள் - நியான், ஆர்கான், கிரிப்டான், செனான்.
•
பாய்மரக் கப்பல், பாராசூட், பட்டம் ஆகியவை எந்த முறையில்
இயங்குகின்றன - காற்றழுத்த முறையில்.
•
சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் வழிவகுக்கும் அடிப்படை முதலீடு -
கல்வி.
•
சமுதாய முன்னேற்றத்தின் விளைநிலம் - பள்ளி.
•
தொடக்கக் கல்வியை உறுதி செய்வதற்கான சட்டம் - அனைவருக்கும் கல்வி இயக்கத்
திட்டம்.
•
இடைநிலைக் கல்வியை உறுதி செய்வதற்கான திட்டம் - அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்டம்.
•
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும்
நாள் - திங்கட் கிழமை.
வேர்ச்சொல்.
எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.
எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.
வினையெச்சம்
வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவைதெரிநிலை வினையெச்சம்
காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்எ.கா: படித்துத் தேறினான்
குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்எ.கா: மெல்ல நடந்தான்
12. இயைபு, முரண் தொடைகள்.
இயைபுத் தொடை :
மோனை, எதுகை போல் இயைபு என்பதும் தொடைகளில் ஒன்றாகும். இது இசைப்பாடல்களில் மிகுதியாக வரும்.
அடியின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகும்.
அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வரும்.
எடுத்துக்காட்டு :
அவரோ வாரார் கார்வந் தன்றே
கொடிதரு முல்லையும் கடிதரும் பின்றே
மோனை, எதுகை போல் இயைபு என்பதும் தொடைகளில் ஒன்றாகும். இது இசைப்பாடல்களில் மிகுதியாக வரும்.
அடியின் இறுதி ஒன்றி வருதல் இயைபு ஆகும்.
அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வரும்.
எடுத்துக்காட்டு :
அவரோ வாரார் கார்வந் தன்றே
கொடிதரு முல்லையும் கடிதரும் பின்றே
- இஃது எழுத்து இயைபு.
இன்னகைத் துவர்வாய் கிளவியும் அணங்கே
நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே
இன்னகைத் துவர்வாய் கிளவியும் அணங்கே
நன்மா மேனிச் சுணங்குமார் அணங்கே
- இது சொல் இயைபு.
முரண் தொடை :
அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.
எதுத்துக்காட்டு :
செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து
கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலிற்...
இதில் சொல் முரண் ( செம்மை, கருமை) அமைந்துள்ளதைக்
காண்க.
தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து
நீர்நசைப் பெறாஅ நெடுநல் யானை...
தீமேய் திறல்வரை நுழைஇப் பரிமெலிந்து
நீர்நசைப் பெறாஅ நெடுநல் யானை...
இதில் பொருள் முரண் ( தீ, நீர்) அமைந்துள்ளது.
இவற்றோடு, இன்னும் அளபெடைத் தொடையும் பிறவும் உள.
அவற்றைப் பற்றிப் பிறகு அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.
எதுகை என்பது இருசீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றுவது எனச் சொல்லலாம். காட்டுகள்: கற்று-பெற்று, பாடம்-மாடம், கண்ணன்-வண்ணன்.இவற்றோடு, இன்னும் அளபெடைத் தொடையும் பிறவும் உள.
அவற்றைப் பற்றிப் பிறகு அவ்வப்போது அறிந்து கொள்ளலாம்.
ஆனால் எதுகைக்கு இரண்டாம் எழுத்து ஒன்றினால் மட்டும் போதாது. முதல் எழுத்துகளும் அளவில் ஒத்துப் போக வேண்டும். அதாவது முதல் எழுத்து குறிலானால், எதுகைச் சீரிலும் முதல் எழுத்துக் குறிலாக வேண்டும். நெடிலாக இருப்பின், எதுகைச் சீரிலும் நெடிலாக வேண்டு. (இது பலரும் செய்யும் தவறு). (எ-கா) தட்டு-பட்டு… எதுகை; ஆனால் தட்டு-பாட்டு எதுகையல்ல.
இதிலிருந்து மோனை என்பது செய்யுள்
அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது.
கற்க கசடற கற்றவை கற்றபின்